அரசு பள்ளியில் அபாகஸ் பயிற்சி
பள்ளிப்பாளையம், ஆக. 29-பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட வெடியரசம்பாளையம் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 'அபாகஸ்' பயிற்சி துவக்க விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், குளோபல் அகாடமி ஆக்சிலன்சி மூலம், மாணவ, மாணவியருக்கு இலவச அபாகஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அபாகஸ் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை, ராசிபுரம் ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது.இந்த, 'அபாகஸ்' பயிற்சியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாமி, துவக்கி வைத்தார். விழாவில், உதவி தலைமை சேகர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். துவக்க நாளில் முதல் கட்டமாக, 25 மாணவ மாணவியருக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.