உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றம்

அரசு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், 'நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம்' அரசு உத்தரவுப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும், 2, 4வது சனிக்கிழமைகளில், 'மெகா' துாய்மை பணி நகரின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்-பட்டு வருகிறது. 'என் குப்பை, என் பொறுப்பு' என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த துாய்மை பணி நடந்து வருகிறது.நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, நாமக்கல் மாநகரில் உள்ள பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை ஆகிய இடங்களில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்-டர்கள் அகற்றப்பட்டன. மேலும், நாமக்கல் திருப்பாக்குளம், ஜெட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பூங்காக்களும் சுத்தம் செய்யப்பட்டன. 'பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான சுவர்களில் போஸ்டர்களை ஒட்ட வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்-துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி