உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு தலைமை டாக்டர் மறுப்பு

ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு தலைமை டாக்டர் மறுப்பு

ப.வேலுார்: நான்கு வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்ப-வத்தில், உடலை பிரேத பரிசோதனை செய்ய ப.வேலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறுத்ததால், நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் போலீசார், உறவி-னர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு, தின-சரி, 500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். ப.வேலுார், ஜேடர்பாளையம், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதி-களில் ஏற்படும் விபத்து, தற்கொலை செய்து இறந்தவர்களின் சட-லங்களை பிரேத பரிசோதனைக்கு, ப.வேலுார் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு வருவது வழக்கம். விபத்து, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஒவ்வொரு மாதமும் பத்துக்கும் மேற்-பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், 4 வயது மகள் பூவரசியை கிணற்றில் வீசி, தாய் சினேகா கொலை செய்தார். சடலத்தை மீட்ட போலீசார், ப.வேலுார் அரசு மருத்துவமனை குளிரூட்டும் பெட்டியில் வைத்-தனர். நேற்று, வழக்கு சம்பந்தமாக அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்ய ப.வேலுார் போலீசார், குழந்தையின் உறவினர்கள், நேற்று காலை, 11:00 மணி முதல் காத்திருந்தனர். மதியம், 2:00 மணிக்கு, ப.வேலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இயலாது. நாமக்கல் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி, பிரேதத்தை நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் கூறியதாவது: ப.வேலுார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், கடந்த சில மாதங்களாக பிரேத பரிசோதனை செய்ய மறுத்து வரு-கின்றனர். ஏனென்றால், இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வர நேரிடும் என்பதால், டாக்டர்கள் பிரேத பரி-சோதனை செய்ய மறுக்கின்றனர். சில நாட்களுக்கு முன், துாக்கு-மாட்டி தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து விட்டதால், நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றோம். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களை ரத்த பரிசோதனை செய்ய ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், ரத்த பரிசோதனை செய்ய மறுத்து நாமக்கல் அனுப்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். ப.வேலுார் அரசு மருத்துவமனையின், தலைமை டாக்டர் ஜெயந்-தியிடம் கேட்டபோது, ''பிரேத பரிசோதனை செய்ய நாங்கள் மறுப்பதில்லை. போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில், நாமக்கல் அனுப்பி வைத்தோம். மேற்கொண்டு இதுகுறித்து விசா-ரணை நடத்துகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை