மேலும் செய்திகள்
ரசாயன உரங்கள் குறைப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி
30-Jul-2024
நாமக்கல்: நாமக்கல் ஒன்றியம், வள்ளிபுரம் கிராமத்தில், வேளாண் துறை மூலம் செயல்பட்டு வரும் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், 'உயிர்ம விவசாயம், இயற்கை விவசாயம்', 'பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம்' குறித்த பயிற்சி முகாம் நடந்தது.நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, வேளாண் துறையின் மானிய திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழக சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்கு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் குறித்தும், உயிர்ம இடுபொருட்களின் பயன்பாடு பற்றியும் விளக்கினார்.மோகனுார் வட்டார உயிர்ம வேளாண் சான்றிதழ் பெற்ற இயற்கை விவசாயி வேலுசாமி, உயிர் உரங்களின் பயன்பாடு, மண்புழு உரம் தயாரிப்பு, களர், உவர் நிலச்சீர்திருத்தம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது பற்றி எடுத்துரைத்தார்.அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் பயிற்சிகள், செயல் விளக்க திடல்கள், பண்ணைப்பள்ளி, கண்டுணர்வு பயணம், விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் குறித்து பேசினார்.உதவி வேளாண் அலுவலர் சதீஸ்குமார், துறை சார்ந்த மானிய திட்டங்கள் பற்றியும், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட அலுவலர் அபிதாஸ்ரீ, பஞ்சகாவ்யம், ஜீவாமிருதம், கன ஜீவாமிருதம், வேஸ்ட் டீ கம்போஸ்சர் குறித்தும் விளக்கினர். முன்னோடி விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jul-2024