உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் டவுன் பஞ்.,ல் மோதல் உச்ச-கட்டம் கூட்டத்தை புறக்கணித்த பெண் கவுன்சி-லர்கள்

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் மோதல் உச்ச-கட்டம் கூட்டத்தை புறக்கணித்த பெண் கவுன்சி-லர்கள்

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், தன்னிச்சை-யாக செயல்படும் தலைவர், செயல் அலுவ-லரை கண்டித்து, நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தை பெண் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்ததால், மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்-ளது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்-சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், செயல் அலு-வலராக சோமசுந்தரம் உள்ளனர். நேற்று, டவுன் பஞ்., தலைவர் லட்சுமி தலைமையில், சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்து-கொள்ள, 9 பெண் கவுன்சிலர்களுக்கு மட்டுமே செயல் அலுவலர் அழைப்பு விடுத்திருந்தார். ஆண் கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லை. இதனால், நேற்று நடந்த கலந்தாய்வு கூட்-டத்தில், 2 பெண் கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள, 7 பெண் கவுன்-சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.இதுகுறித்து, புறக்கணிப்பு கவுன்சிலர்கள் கூறி-யதாவது: ப.வேலுார் செயல் அலுவலர் சோமசுந்தரம், டவுன் பஞ்., நிர்வாகத்தை கேலி கூத்தாக்கி வருகிறார். அவர் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு ஊழல்கள் நடந்-துள்ளன. அதை ஆதாரத்துடன், மாவட்ட நிர்வா-கத்துக்கு அளிக்க உள்ளோம். கவுன்சிலர்களை கலந்துகொள்ளாமல் தன்னிச்சையாக செயல்-படும் தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரத்தை கண்டித்து கலந்தாய்வு கூட்-டத்தை நாங்கள் புறக்கணிப்பு செய்தோம். கலந்-தாய்வு கூட்டம் என்பது பொதுவானது. இதில், ஆண், பெண் கவுன்சிலர் என, பிரிக்காமல் அனைவரையும் கலந்தாய்வு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். கூடிய விரைவில், தலைமையின் ஒப்புதலோடு, ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு மாற்றம் வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ''இன்று (நேற்று) நடந்த கலந்-தாய்வு கூட்டத்திற்கு, பெண் கவுன்சிலர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெண் கவுன்சிலர்கள் கலந்து-கொள்ளாததால், கலந்தாய்வு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படவில்லை. மகளிர் சுய உதவிக்குழு பெண்களை வைத்து, டவுன் பஞ்சா-யத்தில் சில பணிகளை மேற்கொள்வதற்காக, பெண் கவுன்சிலர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தேன். என்னோட ஆர்வத்தால் இதை ஏற்பாடு செய்தேன். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி