மேலும் செய்திகள்
ஆடி வெள்ளியில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
03-Aug-2024
மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. ஆவணி கிருத்திகையையொட்டி, நேற்று, பலவகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் முருகன் அருள்பாலித்தார். கோவில் முழுவதும் பல வகையான மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்துவந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* இதேபோல், மல்லசமுத்திரம் அருகேயுள்ள வையப்பமலை மலைகுன்றின்மீது வீற்றிருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி, அமெரிக்கன் டைமண்ட் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாமக்கல் - கடைவீதி, சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மோகனுார், காந்தமலை, பாலசுப்ரமணியர் கோவிலில், சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
03-Aug-2024