உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 நாள் தீபாவளி விடுமுறை

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 நாள் தீபாவளி விடுமுறை

பள்ளிப்பாளையம், விசைத்தறி தொழில் தொய்வு நிலையில் உள்ளதால், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி விடுமுறை, பத்து நாள் விடப்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில், 30,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி, மூன்று நாள் விடுமுறை அளிக்கப்படும். இந்தாண்டு தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் அடுத்த நேருநகர் பகுதியை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் சரவணன் கூறியதாவது: பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு வழக்கமாக இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்தாண்டு, நேற்று முதல் தொடர்ச்சியாக, பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தொழில் நசிவு தான். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. தொடர்ந்து உற்பத்தி செய்தால் துணிகள் தேக்கம் இன்னும் அதிகரிக்கும். எனவே, இந்தாண்டு பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பின், தொழில் நிலைமை பொறுத்து உற்பத்தி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை