மேலும் செய்திகள்
ரூ.2 கோடியில் திட்டப்பணி தங்கமணி துவக்கி வைப்பு
27-Sep-2025
பள்ளிப்பாளையம்:கொ.ம.தே.க.,வின், பள்ளிப்பாளையம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜசேகர் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர். தொடர்ந்து, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் செந்தில் தலைமையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு, சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி வரவேற்றார்.பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் முன்னாள் பஞ்., தலைவர் மாதேஸ்வரன், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., துணை செயலாளர் சுரேஷ்குமார், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரஞ்சித், வெடியரசம்பாளையம் சோமு, சதீஷ்குமார், செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
27-Sep-2025