மேலும் செய்திகள்
சரக்கு ரயிலில் வந்திறங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி
17-Sep-2025
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்களான, சோளம், புண்ணாக்கு, சோயா உள்ளிட்டவை, வடமாநிலங்களில் இருந்துவரத்தாகிறது. இதேபோல், ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும் பெரும்பாலும் ஆந்திரா, தெலுங்கானா, பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், திருவாரூர், தஞ்சாவூர், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு வாங்கிவரப்படுகிறது.அதன்படி, நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 1,250 டன் ரேஷன் அரிசியை, திருவாரூரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து, 45க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலுார் உள்ளிட்ட பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
17-Sep-2025