உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 128 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

128 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

பள்ளிப்பாளையம்:தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள், உடனடியாக சம்-பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என, போலீசார் அறிவித்துள்ளனர்.அதன்படி, பள்ளிப்பாளையம் சப்-டிவிஷனுக்குட்பட்ட பள்ளிப்-பாளையம், குமாரபாளையம், வெப்படை, கொக்கராயன்-பேட்டை, மொளசி ஆகிய, ஐந்து போலீஸ் ஸ்டேஷன் எல்-லைக்கு உட்பட்ட, 128 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்ப-டைக்கப்பட்டுள்ளன.போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்ட இந்த துப்பாக்கி-களை, ஓட்டுப்பதிவு முடிந்த பின் சம்பந்தப்பட்டவருக்கு மீண்டும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ