மேலும் செய்திகள்
சாக்கடை கால்வாய் பணிக்கு பூமி பூஜை
10-May-2025
ப.வேலுார்,ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் மல்லசமுத்திரம் செயல் அலுவலராக உள்ள மூவேந்திர பாண்டியன், 12வதாக ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு, பொறுப்பு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.அங்கு அவர் செயல் அலுவலராக பொறுப்பேற்றது முதல் தலைவர், கவுன்சிலரிடையே இருந்த ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மன்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றாமல் டவுன் பஞ்சாயத்து முடங்கி கிடந்தது.மேலும், ப.வேலுார் வாரச்சந்தை முறைகேடாக ஏலம் விட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த, ஆறு மாதங்களாக புதிதாக தெரு விளக்குகள் அமைக்காதது மற்றும் குப்பை சேகரிப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.இந்நிலையில் ப.வேலுார் செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன் (பொ) விடுவிக்கப்பட்டார். தற்போது, திருப்பூர் மாவட்டம், அவினாசி டவுன் பஞ்சாயத்தில் செயல் அலுவலராக உள்ள சண்முகம் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர், 13வதாக பொறுப்பேற்க உள்ளார். கடந்த, 36 மாதத்தில், 13 செயல் அலுவலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
10-May-2025