உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 15 புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 15 புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்

ப.வேலுார், அக். 20--பரமத்தி வேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 25 கே.வி.ஏ., கொண்ட, 15 புதிய டிரான்ஸ்பார்மர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.பரமத்தி வேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட நல்லியாம்பாளையம்புதுார், முனிய கவுண்டம்பாளையம், பூசாரிபாளையம், நெட்டையம்பாளையம், சேலுார், கொத்தமங்கலம், பொத்தனுார், தண்ணீர் பந்தல்மேடு ஆகிய பகுதிகளில், 25 கே.வி.ஏ., கொண்ட, 15 புதிய டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் நேற்று இயக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ப.வேலுார் மின்சார செயற்பொறியாளர் வரதராஜன், உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் வினோத்குமார், வெங்கரை டவுன் பஞ்., தலைவர் விஜயகுமார், ப.வேலுார் முன்னாள் தலைவர் பொன்னிவேலு, வக்கீல் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை