மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்க கூட்டம்
17-Nov-2024
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
21-Oct-2024
நாமக்கல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, 15-வது மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர்கள் இளங்கோவன், தங்கராஜூ, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை, தாலுகா மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களுக்கு என்று தனி வார்டு ஒதுக்க வேண்டும்.நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழக அரசு சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
17-Nov-2024
21-Oct-2024