உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி விடுதி மாணவியரை தேனீக்கள் கொட்டி 16 பேர் காயம்

பள்ளி விடுதி மாணவியரை தேனீக்கள் கொட்டி 16 பேர் காயம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, தனியார் பள்ளி விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவியர், பெற்றோரை தேனீக்கள் கொட்டியதில், 16 பேர் காயமடைந்தனர். ராசிபுரம் தேசியநெடுஞ்சாலை அருகே, தனியார் பள்ளி செயல்பட்டு வருகிது. இதில், 600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி விடுதியில், 200க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியரின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். மாணவியர், பெற்றோர்களுடன் அமர்ந்து அவர்கள் வாங்கி வந்த தின்பண்டம் மற்றும் மதிய உணவை சாப்பிட தொடங்கினர்.அப்போது, திடீரென வளாகத்திற்குள் வந்த தேனீக்கள், மாணவியர் மற்றும் பெற்றோர்களை கொட்ட தொடங்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பித்து, அங்குள்ள அறைகளுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டனர். பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக காயம்பட்ட மாணவியர் மற்றும் பெற்றோர்களை சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஒன்பது மாணவியர் மற்றும் ஏழு பெற்றோர், என மொத்தம், 16 பேர் காயமடைந்தனர். முதலுதவிக்கு பின் அனைவரும் வீடு திரும்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை