உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்செங்கோடு, திருச்செங்கோடு, சூரியம்பாளையம் போஸ்ட் ஆபீஸ் அருகே, போதை மாத்திரை விற்பனை நடப்பதாக, திருச்செங்கோடு நகர டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த, இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்த ஒரு பார்சலை பிரித்து பார்த்தபோது, ராஜஸ்தானில் இருந்து விற்பனைக்கு 'ஸ்பீட் போஸ்ட்' மூலம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்திற்கு, போதை மாத்திரைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அந்த பார்சலில், 1,000 மாத்திரைகள் இருந்தன. தொடர்ந்து, நடத்திய விசாரணையில் அவர்கள், திருச்செங்கோடு, பெரிய பாவடி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 20, குமாரபாளையம், மரவபாளையத்தான்காடு, ஓம் சக்தி நகரை சேர்ந்த திலீப் குமார், 23, என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை