உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒயர் திருடிய 2 பேர் கைது

ஒயர் திருடிய 2 பேர் கைது

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு, 30; விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு ஆண், ஒரு பெண் கிணற்றுக்கு செல்லும் மின்மோட்டார் ஒயரை திருடிச்செல்லும்போது ஊர் மக்கள் பார்த்து, எலச்சிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர்கள் சேலம், பனமரத்துப்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்த ரங்கன் மகன் முருகன், 65, ராசிபுரம் அடுத்த, குருசாமிபாளையத்தை சேர்ந்த கவிதா, 45, என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்த, 3,000 ரூபாய் மதிப்பிலான ஒயரை கைப்பற்றி, அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி