போனில் மிரட்டிய 2 பேர் கைது
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலாவை சேர்ந்தவர் சேகர், 58; இவரது மகன் போஸ், 35. இவர்கள் இதே பகுதியை சேர்ந்த ரங்கராஜன் மகன் நல்லுசாமி, 40, என்பவரிடம் பணம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நி-லையில், நல்லுசாமியும், மெட்டாலாவை சேர்ந்த தனபால் மகன் பாலமுருகன், 38, என்பவரும், 'சேகர், போஸ் இருவரும் பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இவர்கள் மீது லாரியை ஏற்ற வேண்டும்' என, பேசியதாக தெரிகிறது.இதுகுறித்த ஆடியோவை சேகர் ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்ததுடன், தன்னை கொலை செய்ய இரு-வரும் முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன்படி, ஆயில்பட்டி போலீசார் விசாரணை செய்து, நல்லுசாமி, பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.