245 மூட்டை மஞ்சள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்
245 மூட்டை மஞ்சள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில், கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,642 ரூபாய், அதிகபட்சம், 15,223 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,033 ரூபாய், அதிகபட்சம், 13,219 ரூபாய்; பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 5,769 ரூபாய், அதிகபட்சம், 13,569 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 180, உருண்டை, 60, பனங்காலி, 5 என, 245 மூட்டை மஞ்சள், 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைந்ததால், 15 நாட்களுக்கு ஒரு முறை மஞ்சள் ஏலம் நடப்பது குறிப்பிடத்தக்கது.