உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிரான்ஸ்பார்மர் திருடன் உள்பட 3 பேர் வாகன தணிக்கையில் சிக்கினர்

டிரான்ஸ்பார்மர் திருடன் உள்பட 3 பேர் வாகன தணிக்கையில் சிக்கினர்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, சேந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீலரில், 'ஸ்பேனர்' செட்டுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த, மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் சரவணன், 43, மணியனுார், விவேகானந்தர் தெருவை சேர்ந்த பழனி மகன் மணி, 55, கொண்டலாம்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் சுரேஷ், 32, ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து, அருகில் உள்ள நுால் மில்லில் இயந்திரங்களை திருட சென்றது தெரிந்தது. மூவரையும், ராசிபுரம் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சரவணன் மீது ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், கடந்தாண்டு வெண்ணந்துாரில் டிரான்ஸ்பார்மர் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை