உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோட்டில் 30 பள்ளிகளின் 410 வாகனங்கள் ஆய்வு

தி.கோட்டில் 30 பள்ளிகளின் 410 வாகனங்கள் ஆய்வு

திருச்செங்கோடு, தமிழக அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்தில் பள்ளி வாகனங்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என, ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட, 30 பள்ளிகளை சேர்ந்த, 410 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா, தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சரவணன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, வாகனங்களில் உரிய பாதுகாப்பு உள்ளதா, ஏறி இறங்கும் வழி சரியாக உள்ளதா, ஓட்டுனர், நடத்துனர் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனரா, படிகள் உறுதியாக உள்ளதா, ஆபத்து அவசர கால வழிகள் சரியாக உள்ளதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி ஆகியவைகள் உள்ளதா, புகைச்சான்று, பசுமை சான்று உள்ளிட்ட சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். பரிசோதனையில் குறைபாடு கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்து கொண்டுவந்து தகுதிச்சான்று பெற வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி