மேலும் செய்திகள்
நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி
31-Oct-2025
நாமக்கல், நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, வலையப்பட்டி அருகே தனியார் பள்ளியில் நடந்தது. தாளாளர் ரஞ்சித், முதல்வர் யுகபிரியா, குத்துச்சண்டை வீரர் பிரசாத் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆறு பிரிவுகளின் கீழ் சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.இதில், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, தொடுபுள்ளி ஆகிய போட்டிகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார், அரசு பள்ளிகளை சேர்ந்த, 450 மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட தமிழ் சங்க செயலாளர் நாராயண மூர்த்தி சான்றிதழ், பதக்கம் வழங்கினார். ஏற்பாடுகளை, சிலம்ப ஆசிரியர்கள், பயிற்சியாளர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திர குமார், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
31-Oct-2025