தொகுப்பூதிய நர்சுகள் 4ம் நாள் போராட்டம்
நாமக்கல்: தமிழகம் முழுவதும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொகுப்பூதிய செவிலியர்கள், பணி புறக்கணிப்பு மற்றும் காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை போர்டிகோவில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணிப்பு, காத்தி-ருப்பு போராட்டத்தை கடந்த, 20ல் தொடங்கினர். நேற்று நான்காம் நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நீடித்-தது. சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுமியா தலைமை வகித்தார்.