உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேட்பாரற்று நின்ற காரில் 525 கிலோ குட்கா பறிமுதல்

கேட்பாரற்று நின்ற காரில் 525 கிலோ குட்கா பறிமுதல்

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், பரமத்தி, கோனுார் மேம்பாலம் அருகே, வெளிமாநில பதிவு எண் கொண்ட, 'ஸ்கார்பியோ' கார் பழுதான நிலையில் நிற்பதாக, நேற்று பரமத்தி போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காரை திறந்து சோதனை செய்தனர். அப்போது, காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 3 லட்சத்து, 54,000 ரூபாய் மதிப்புடைய, 525 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை கைப்பற்றினர். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை