உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு 5,926 பேர் பங்கேற்பு: 81 பேர் ஆப்சென்ட்

மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு 5,926 பேர் பங்கேற்பு: 81 பேர் ஆப்சென்ட்

நாமக்கல்: மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 14 மையங்களில், 5,926 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 81 பேர் கலந்துகொள்ளவில்லை.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இள-நிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பு, 2025ம் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. அதில், அகில இந்திய அளவில் மொத்தம், 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் மொத்தம், 1.50 லட்சம் பேர், 'நீட்' தேர்வு எழுதினர்.நாமக்கல் மாவட்டத்தில், 14 தேர்வு மையங்களில், 'நீட்' தேர்வு நடந்தது. 6,007 பேர் தேர்வு எழுத, 'ஹால் டிக்கெட்' பெற்றிருந்-தனர். இவர்களில், 81 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. மொத்தம், 5,926 பேர் தேர்வு எழுதினர். ஒவ்வொரு மையத்-திலும் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்-பட்டிருந்தன. காலை, 11:30 மணி முதல், தேர்வர்கள் மையத்-திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம், 1:30 மணிக்கு, தேர்வு மையங்-களின் கதவுகள் பூட்டப்பட்டன. 2:00 மணிக்கு தேர்வர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. அதில் உள்ள விபரங்களை தேர்வர்கள் பூர்த்தி செய்தனர். தொடர்ந்து, கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டு, 2:20 மணிக்கு தேர்வு துவங்கியது. மாலை, 5:20 மணிக்கு தேர்வு முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ