6 பவுன் நகை திருட்டு
சேந்தமங்கலம், சேந்தமங்கலத்தில் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், 6 பவுன் நகைகளை திருடி சென்றனர்.சேந்தமங்கலம் வளையல்காரர் வீதியை சேர்ந்தவர் முகமதுசமீர், 50. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கூரையில் இருந்த ஓடுகளை பிரித்து, உள்ளே இறங்கி பீரோவில் வைத்திருந்த, 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து, முகமதுசமீர் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.