உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 6 யூனிட் மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

6 யூனிட் மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது

நாமக்கல், நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் லாரிகளில் மணல் திருடி செல்வதாக, நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 5:15 மணிக்கு, சேலம்-கரூர் மெயின் சாலை, தனியார் ஸ்பின்னிங் மில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான லாரியை, தொட்டியம் கோட்டைமேட்டை சேர்ந்த வசந்தகுமார், 22, என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது.மேலும், லாரியில், ஆறு யூனிட் மணல் அனுமதியின்றி கடத்தி சென்றதும், லாரி உரிமையாளர் லட்சுமணன் சொல்லும் இடத்தில் இறக்குவதற்காக கொண்டு சென்றதும் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், ஆறு யூனிட் மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ