மேலும் செய்திகள்
5 தாலுகாக்களில் ஜமாபந்தி; 678 மனுக்கள் வழங்கல்
23-May-2025
ராசிபுரம், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வெண்ணந்துார் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது. நேற்று மட்டும், 315 மனுக்கள் பெறப்பட்டன. இதில், இணையவழி பட்டா மாறுதல் - 1 மற்றும் நத்தம் பட்டா மாறுதல், 6 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு மனுதாரருக்கு பட்டா நகல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம், 977 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
23-May-2025