மண் அரிப்பால் சரிந்த வாய்க்கால் தடுப்பு சுவர்
குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வெள்ளைப்பாறை புதுார் பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில், மழைநீர் வாய்க்கால் கரையில் பெருக்கெடுத்து ஓடி வருவதால், மண் அரிப்பின் காரணமாக, வாய்க்காலின் பக்கவாட்டு சுவர் இடிந்து, வாய்க்காலில் சரிந்தது. தொடர்ந்து மண் அரிப்பால் பக்கவாட்டு சுவர் சேதமாகாமல் இருக்கும் வகையில் உடனே சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.