புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர நாளை ஆலோசனை கூட்டம்
நாமக்கல்: புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நாளை நடக்கிறது. நாமக்கல் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதலைப்-பட்டி பகுதியில், 19.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை, கடந்த, 22ல், நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் ஏலத்தில் விடும் பணியை, மாநகராட்சி நடத்தி முடித்துள்ளது. இந்த கடைகளுக்கு, கடந்த, 1 முதல், வாடகை வசூலிக்கும் வகையில் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, புதிய பஸ் ஸ்டாண்டை விரைவில் பயன்பாட்-டுக்கு கொண்டு வர வேண்டும் என, கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக நாளை காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தாசில்தார், பி.டி.ஓ., அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையா-ளர்கள், ஷேர் ஆட்டோ சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.