உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெண்ணந்துாரில் சாலையை ஆக்கிரமித்து தினசரி மார்க்கெட்

வெண்ணந்துாரில் சாலையை ஆக்கிரமித்து தினசரி மார்க்கெட்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் டவுன் பஞ்., பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், டவுன் பஞ்., அலுவ-லகம் முன் நடக்கும் தினசரி மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வரு-கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'வெண்ணந்துார் டவுன் பஞ்., மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் இங்கு காய்கறிகளை வாங்க வருகின்றனர். எங்களுக்கு சந்தை வசதி இல்லை. இதனால் சாலையில் சந்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் சரவணன் கூறு-கையில், ''சந்தை அமைக்க, அரசிடமிருந்து இதுவரை எந்த அறி-விப்பும் வரவில்லை. நான் பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்-படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி