உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் /  கடவுள் குறித்த போஸ்டரால் பரபரப்பு

 கடவுள் குறித்த போஸ்டரால் பரபரப்பு

ராசிபுரம்: நாமக்கல் மற்றும் ராசிபுரம் முக்கிய சாலைகளில், நேற்று வெள்ளை, கருப்பு நிறத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், 'அமைதி நிலவும் தமிழ்நாட்டில், முருகன் பெயரில் மதவெறியா; காக்க காக்க தமிழ்நாட்டை காக்க, விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட; போராடுவோம்... போராடுவோம்' என்று முடித்துள்ளனர். இந்த போஸ்டரில், எந்த ஒரு அமைப்பின் பெயரோ, பிரின்ட் செய்த ஆப்செட் பெயரோ இல்லை. பிரச்னைக்குரிய போஸ்டரை ஒட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ