உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை நடுவே உள்ள மின் கம்பத்தால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு

சாலை நடுவே உள்ள மின் கம்பத்தால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகரில் சாலை நடுவே உள்ள மின் கம்பம், போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி கவுன்சிலர் சரவணன் கூறியதாவது:பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர், குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். இந்த பெரியார் நகர் பகுதியில் செல்லும் பிரதான சாலை நடுவே, மின் கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. பள்ளி வாகனங்கள் வர முடியவில்லை. அவசரம் உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இரவில், டூவீலரில் செல்வோர் கவனமுடன் செல்ல வேண்டும். இல்லையெனில் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. சாலையின் மையப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இந்த மின் கம்பத்தை, சாலையோரத்தில் மாற்றியமைக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் வந்து மின்கம்பத்தை பார்த்துவிட்டு சென்றனர். ஆனால், இன்னும் மின்கம்பத்தை அகற்றவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை