குளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, சோழசிராமணி, மொளசி, தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆயக்காட்டூர் உள்ளிட்ட முக்கிய பகுதிக்கு வாகனங்கள் செல்கின்றன. நேற்று மாலை, கன மழை பெய்தது. இதனால் மழைநீர் சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். ஒவ்வொரு முறையும் மழை பெய்தால், இதுபோல தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதையின் கான்கிரீட் தளம் சேதமடைகிறது. சுரங்க பாதையில் மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மோட்டர், சில ஆண்டுக்கு முன்பே பழுதடைந்து விட்டது. இதனால் மழை நீர் வெளியேற வழியில்லாமல் சுரங்க பாதையில் குளம் போல் தேங்கியள்ளது.