உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆற்றில் ஆபத்தான இடத்தில் எச்சரிக்கை பலகை அவசியம்

ஆற்றில் ஆபத்தான இடத்தில் எச்சரிக்கை பலகை அவசியம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில் பாப்பம்பாளையம், பெரியார் நகர், சந்தைப்பேட்டை, காவிரி, ஓடப்பள்ளி, பாலம் பகுதி உள்ளிட்ட இடங்களில், ஆற்றில் துணி துவைக்கவும், குளிக்கவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வெளியூர் மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.வெளியூரில் இருந்து வருவோருக்கு, ஆற்றில் உள்ள ஆபத்தான இடம் குறித்து தெரியாது. இதனால் ஆற்றல் மூழ்கி இறக்கும் சம்-பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே, ஆற்றில் ஆபத்தான பகு-தியில் எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ