மேலும் செய்திகள்
விபத்தில் முதியவர் சாவு
11-Jul-2025
மோகனுார்:ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த காளிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நவீன்குமார், 25; இவர், ஈரோடு பகுதியில் உள்ள தனியார் தீவன ஆலையில் பணியாற்றி வந்தார். கடந்த, 13ல், மோகனுாரில் இருந்து காட்டுப்புத்துார் செல்லும் சாலையில் உள்ள வடுகபட்டி அருகே, தன், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு இறந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jul-2025