லாரிகளுக்கு ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும்: டி.ஜி.பி.,யிடம் கோரிக்கை
நாமக்கல்: 'தமிழகத்தில் லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்த செய்ய வேண்டும்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், பொருளாளர் தாமோதரன், நாமக்கல் தாலுகா லாரி உரிமை-யாளர்கள் சங்க தலைவர் அருள் ஆகியோர், தமி-ழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் லாரிகள் மற்றும் மோட்டார் வாக-னங்களுக்கு, தற்போது, 'ஸ்பாட் பைன்' முறை நடைமுறையில் உள்ளது. ஒரு வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அப-ராதம் விதிப்பது, நெடுஞ்சாலைகளின் அருகில் ஓய்வெடுக்கும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்-டுள்ள வாகனங்களுக்கு காரணமின்றி அபராதம் விதிப்பது, வாகனங்கள் லோடுகளை ஏற்றவும், இறக்கவும் தொழிற்சாலைகளுக்கு வெளியே காத்திருக்கும் போது டிரைவர்களுக்கு தெரியாம-லேயே அபராதம் விதிப்பது போன்ற முறைகே-டுகள் அதிகரித்துள்ளன.மேலும், என்ன குற்றம் என்றே கூறாமல், 'ஜெனரல் அபன்ஸ்' என்று அபராதம் விதிக்கப்ப-டுகிறது. வெளிமாநிலங்களில் இயங்கிக் கொண்-டிருக்கும் வாகனங்களுக்கு, தமிழகத்தில் அப-ராதம் விதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். தமிழ-கத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், லாரியின் பின்னால் வாக-னங்களில் சென்று, லாரிகளில் ஏறி தார்பாய்-களை கிழித்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, மதுரை - துத்துக்குடி தேசிய நெடுஞ்-சாலை, திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்-சாலை, கோவை, காரணம்பேட்டை, பல்லடம், அவிநாசிபாளையம், காங்கேயம், தாராபுரம், சேலம் மாவட்டம் வைகுந்தம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கனரக வாகனத்திற்கு விபத்து ஏற்படும் போது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க, 30 நாட்கள் வரை ஆகிறது. அதனால், விபத்திற்குள்ளான வாகனத்திற்கு வழக்குப்பதிவு செய்து, ஓரிரு நாட்களில் வாகனத்தை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும்.லாரி டிரைவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் போது, போலீசார் வாங்க மறுக்கின்-றனர். இதனால் பல லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குற்-றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றங்கள் நடந்தால் அதுசம்பந்தமான புகாரை பெற்று, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.