வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பேருந்துகளில் வேக கட்டுப்பாடு கருவி இல்லையா. மழை நேரத்தில் வாகனங்கள் பிரேக் செய்தால் சிறிது வழுக்கும் என்று கூட தெரியாத ஓட்டுநர்
பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையத்தில் இருந்து அதிவேகமாக வந்த தனியார் பஸ், கீழ்காலனி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று, நேற்று மாலை, 4:45 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், பள்ளிப்பாளையம் அடுத்த கீழ்காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில், இரண்டு பயணிகள் காயமடைந்தனர். மேலும்,பஸ் மோதியதில், மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பமும் சேமடைந்தது. இன்னும் இரண்டு அடி பஸ் சென்றிருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ் தடுப்பு சுவர் மீது மோதி நின்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேருந்துகளில் வேக கட்டுப்பாடு கருவி இல்லையா. மழை நேரத்தில் வாகனங்கள் பிரேக் செய்தால் சிறிது வழுக்கும் என்று கூட தெரியாத ஓட்டுநர்