உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு ஆணைப்படி டி.எஸ்.பி., அலுவலகம் ப.பாளையத்தில் தான் அமைக்க வேண்டும்

அரசு ஆணைப்படி டி.எஸ்.பி., அலுவலகம் ப.பாளையத்தில் தான் அமைக்க வேண்டும்

பள்ளிப்பாளையம்: 'அரசாணைப்படி டி.எஸ்.பி., அலுவலகம், மையப்பகுதியான பள்ளிப்பாளையத்தில் அமைக்க வேண்டும்' என, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, மொளசி மற்றும் விரைவில் கொக்கராயன்பேட்டை பகுதியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட உள்ளது. இந்த, ஐந்து போலீஸ் ஸ்டேஷனை உள்ளடக்கி, டி.எஸ்.பி., அலுவலகம் உருவாக்கப்-பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் சிரமமின்றி வந்து-செல்லும் வகையில், மையப்பகுதியான பள்ளிப்பாளையத்தில், டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி, நேற்று பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்த கட்சி கூட்டம் நடந்தது. தி.மு.க.,-அ.தி.மு.க.,-காங்.,-பா.ஜ.,-பா.ம.க.,-த.வெ.க., லோக் ஜனசக்தி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்-துகொண்டனர்.இதுகுறித்து, அனைத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் வெங்-கடேஷ் கூறியதாவது:அரசு ஆணைப்படி பள்ளிப்பாளையம் பகுதியில் தான், டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க வேண்டும். பள்ளிப்பாளையம் மையப்பகுதி என்பதால் மொளசி, கொக்கராயன்பேட்டை, ஐந்து-பனை உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்வர். பள்ளிப்பாளையம் அலமேடு பகுதியில் காவல்து-றைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்திலேயே டி.எஸ்.பி., அலுவகம் அமைக்கலாம். குமாரபாளையம் பகு-தியில், டி.எஸ்.பி., அலுவலகம் அமைத்தால், மொளசி, கொக்கரா-யன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து வருவோர், 35 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். அரசு ஆணைப்படி, மைய பகுதியான பள்ளிப்பாளையத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க வேண்டும் என, காவல் துறை உயர் அதிகாரிகளிடம் மனு கொடுக்-கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ