உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கட்சியை பலப்படுத்த முடிவு ஆதிவாசி காங்., து.தலைவர்

கட்சியை பலப்படுத்த முடிவு ஆதிவாசி காங்., து.தலைவர்

நாமக்கல், : ''கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த, 'அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது,'' என, அகில இந்திய ஆதிவாசி காங்., துணைத்தலைவரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமான பெல்லையா நாயக் கூறினார்.இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது:தேசிய அளவில், கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க, காங்., கட்சி சார்பில், 'சங்கதன் ஸ்ரீஜன் அபியான்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அகில இந்திய அளவில் உள்ள மூத்த தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், வட்டார, நகர, மாவட்ட அளவில் உள்ள கட்சியினர், மக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் அளிக்கும் பரிந்துரையை ஏற்று, கட்சியை ஒரு பலமான மக்கள் தொடர்புள்ள கட்சியாக ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், ஓ.பி.சி., பிரிவு மாநில தலைவர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர் ஷேக்நவீத், செழியன், சுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ