உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை

தி.மு.க., இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை

தி.மு.க., இளைஞரணிஉறுப்பினர்கள் சேர்க்கைவெண்ணந்துார், அக். 5-வெண்ணந்துார் ஒன்றியத்தில், நேற்று இல்லந்தோறும் தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் முதல் கட்டமாக, 1,600 உறுப்பினர் படிவங்களை, வெண்ணந்துார் ஒன்றிய செயலாளர் துரைசாமி முன்னிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் பெற்றுக்கொண்டார்.மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கரன், வெண்ணந்துார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் வித்யா, அருள், தினேஷ் உள்பட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை