உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா நாமக்கல்லில் கொண்டாட்ட

அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா நாமக்கல்லில் கொண்டாட்ட

அ.தி.மு.க., 53வது ஆண்டு விழா நாமக்கல்லில் கொண்டாட்டம்நாமக்கல், அக். 18-அ.தி.மு.க.,வின், 53-வது ஆண்டு தொடக்கவிழா நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் நகர அ.தி.மு.க., சார்பில், 53வது ஆண்டு விழா, நாமக்கல்-பரமத்தி சாலை, மாநகராட்சி செலம்ப கவுண்டர் பூங்காவில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலை அருகில் கொண்டாடப்பட்டது.முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் மயில்சுந்தரம் தலைமையில், முன்னாள் நகராட்சி சேர்மன் கரிகாலன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஈ.வே.ரா., சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.* நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர். புதுப்பட்டியில், அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமையில், 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க., கொடி ஏற்றினர். மேலும், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், மெட்டாலா பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்கவிழா கொண்டாடப்பட்டது. இதில், சீனிவாசன், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை