உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ப.வேலுார்: -பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பரமத்தி ஒன்றியம் வடக்கு, தெற்கு, பரமத்தி மற்றும் வேலுார் பேரூராட்சி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், வடக்கு ஒன்-றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார், ப.வேலுார் நகர செயலாளர் பொன்னிவேல் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். பரமத்தி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அவர் பேசு-கையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்து, 210 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்க வேண்டும்,'' என்றார். மாவட்ட வர்த்-தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் தனசேகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி