பருத்தி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
ராசிபுரம், பருத்தியில் இளஞ்சிவப்பு காய் புழு பாதிப்பு அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த ராசிபுரம் வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: பருத்தியில் இளஞ்சிவப்பு காய் புழு பாதிப்பு வேகமாக ஏற்பட்டு வருகிறது. இதன் அறிகுறிகள், முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள், மொட்டுகள், பூக்கள், காய்களை தாக்கி அளிக்கும். தாக்கப்பட்ட மொட்டுகள் உதிர்ந்து விடும். வளர்ச்சி அடைந்த புழுக்கள், காய்களை துளைத்து உள்ளே சென்று சேதாரத்தை உண்டு பண்ணும். இதனால் தாக்கப்பட்ட பஞ்சுகள் கறை படிந்து காணப்படும். இதை கட்டுப்படுத்த, வயல்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நிலத்தை ஆழமாக உழுவதன் மூலம் கூட்டு புழுக்களை அளிக்கலாம். சரியான பருவத்தில் விதைப்பு செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையை தாண்டும்போது, ஹெக்டேருக்கு, 2.5 லிட்டர் ட்ரையசோபாஸ் மருந்தை தெளித்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.