அகற்றிய மேற்கூரையை மீண்டும் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அகற்றிய மேற்கூரை மீண்டும் அமைக்காததை கண்டித்து, நகர்மன்ற கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பள்ளிப்பாளையம் நகர்மன்ற கூட்டம், நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் தங்க-மணி நிதி ஒதுக்கி, 60 லட்சம் ரூபாயில் பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை அமைக்கப்பட்டது. பாலம் கட்டும் பணியின் போது, மேற்கூரை அகற்றப்பட்டது. பணி முடிந்து மீண்டும் மேற்கூரை அமைக்க வேண்டும் என, பலமுறை நக-ராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அமைக்கவில்லை. இதனால் பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமைக்கவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்,'' என்றார். 10 நிமிடம் கழித்து மீண்டும் மன்ற அரங்கிற்கு வந்து கூட்டத்தில் கலந்து-கொண்டனர்.தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க., கவுன்சிலர்: வார்டு தோறும் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தரப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சரவணன், அ.தி.மு.க., கவுன்சிலர்:பெரியார் நகர் பகுதியில் கும்பலாக பலர் அமர்ந்து தினமும் மது குடிக்கின்றனர். மது பாட்டிலை சாலையில் போட்டு உடைக்கின்-றனர். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.செல்வராஜ், நகராட்சி தலைவர்: கவுன்சிலர்கள் வார்டு குறித்து தெரிவிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்-கப்படும். நகர சபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மக்கள் தெரிவித்த கோரிக்கை மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்-பட்டு வருகிறது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் நகரில், 'குடி'மகன்கள் வராதபடி அப்ப-குதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், அனைத்து வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.