உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் உயிரிழப்பு

அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் உயிரிழப்பு

புதுச்சத்திரம் புதுச்சத்திரம் அருகே, கதிராநல்லுார் நடுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன், 56; இவர், அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில், 'டாக்டியா' சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாகராஜன், டூவீலரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, செல்லியாயிபாளையம் என்ற இடத்தில் தடுமாறி விழுந்து மயக்கமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நாகராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ