ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் மாநில சாதனை
மல்லசமுத்திரம்: சென்னையில் உள்ள கோலா சரஸ்வதி வைஷ்ணவ் உயர்நிலை பள்ளியில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே மாநில அள-விலான கோ-கோ போட்டி, கடந்த, 8 முதல், 10 வரை மூன்று நாட்கள் நடந்தது. இப்போட்டியில், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 128 பள்ளிகளும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 115 பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில், மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிப் பள்ளி மாணவர்கள், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே முதன் முறையாக, இப்போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் முத்துசாமி, முதல்வர் பழ-னிவேல், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.