உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர்தல் தொடர்பாக பதிவான 338 வழக்குகளும் முடித்து வைப்பு

தேர்தல் தொடர்பாக பதிவான 338 வழக்குகளும் முடித்து வைப்பு

ராசிபுரம்: தேர்தல் தொடர்பாக, 'சி-விஜில்', டோல் பிரீ எண்ணில் பதிவான, 338 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும், அதன் மீது தீர்வு காணவும் மாவட்ட அளவில், 'கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்பட்டது. 'சி-விஜில்' என்ற மொபைல் அப்ளிகேஷன் மற்றும் டோல் பிரீ எண் மூலம் வரும் புகார்களை, 12 மணி நேரத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குள், நேற்று முன்தினம் வரை, 'சி-விஜில்' ஆப்பில், 21, தொலைபேசியில், 12 என, 33 புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல்லில், 70, பரமத்தி வேலுாரில், 39, ராசிபுரத்தில், 110, சேந்தமங்கலம், 41, திருச்செங்கோட்டில், 44 என மொத்தம், 338 புகார்கள் பெறப்பட்டன. இவை அனைத்தும், நேற்று முன்தினம் மாலைக்குள் தீர்த்து வைக்கப்பட்டன.மாவட்டத்தில், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தான் அதிகபட்ச புகார்கள் பதிவாகியிருந்தன. சி-விஜிலில், 79, மொபைல் போனில், 31, என, மொத்தம், 110 புகார்கள் வந்தன. மொத்தமாக, சி-விஜில் மூலம், 230 புகார்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ