உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் வழிபாடு

ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் வழிபாடு

நாமக்கல்: ஆனி கிருத்திகையையொட்டி, நாமக்கல் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல்--மோகனுார் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவில், நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கி, 11:00 மணிக்கு அபிஷேகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மயிலிறகு ஆடையுடன், தங்க கவசத்தில் ராஜா அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்திலும் பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டாயுதபாணி சுவாமி சிறப்பு அங்காரத்திலும், மோகனுார், காந்தமலை, பாலசுப்ரமணியர் தங்கக்கவசத்திலும், ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர், திருநீறு அலங்காரத்-திலும், கருங்கல்பாளைம், கரையான்புதுார் கருமலை, தண்டாயுத-பாணி சுவாமி ராஜ அலங்காரத்திலும் பக்தர் களுக்கு அருள்பாலித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை