உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர்தல் பணிகளை பார்வையிட தி.மு.க., தொகுதி பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் பணிகளை பார்வையிட தி.மு.க., தொகுதி பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் பணிகளை பார்வையிடதி.மு.க., தொகுதி பார்வையாளர்கள் நியமனம்நாமக்கல், அக். 9-நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிகளை பார்வையிட, தி.மு.க., தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், 'பூத்' கமிட்டி அமைத்தல்,- வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்,- வாக்காளர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, தொகுதி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு, மாநில நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன், சேந்தமங்கலம் தொகுதிக்கு, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, நாமக்கல் தொகுதிக்கு, மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் ஜான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ப.வேலுார் சட்டசபை தொகுதிக்கு, மாநில அயலக அணி துணை செயலாளர் உமாராணி, திருச்செங்கோடு தொகுதிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், குமாரபாளையம் தொகுதிக்கு, மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை