அரப்பளீஸ்வரர் கோவில் கடை ரூ.12.60 லட்சத்திற்கு ஏலம்
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலை சுற்றியுள்ள பிரசாத கடை, பழக்கடைகளுக்கான ஏலம், நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சரக ஆய்வாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஏழு கடைகள், 12.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அரப்பளீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுந்தர-ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.